முகப்பு /செய்தி /கல்வி / ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும் 2022-ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிப்பு வெளியீடு

ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும் 2022-ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிப்பு வெளியீடு

விண்ணப்பிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வு அடிப்படையில் உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறமை வாய்ந்த குழு ஒன்று, மாணவர்களை தேர்வு செய்யும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும் 2022-ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள் பெற்றவராக நீங்கள் இருப்பின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

நடப்பாண்டில் மொத்தம் 76 யுஜி மற்றும் பி.ஜி. பட்டப் படிப்பு மாணவர்களுக்கு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் 10 லட்சத்துக்கும் மேலான ஊழியர்கள், குடும்பத்தினர்களுக்கு தடுப்பூசி

செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல், கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங், மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் யுஜி, பி.ஜி. மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். உதவித்தொகையை பெற இந்தியாவில் எங்கு பயிலும் மாணவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க : கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 700 டன் ஆக்ஸிஜன் இலவசமாக சப்ளை செய்யும் ரிலையன்ஸ்

இளங்கலை மாணவர்களில் அதிகபட்சம் 60 பேர் உதவித் தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படும்.

இதையும் படிங்க :  கொரோனாவை விரைவாக கண்டறியும் சாதனம்: இஸ்ரேலிய வல்லுநர்கள் இந்தியா வருவதற்கு அனுமதி கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

இதேபோன்று முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களில் அதிகபட்சம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ. 6 லட்சம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்ப கட்டணம் ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தகுதியுடையோர் https://www.scholarships.reliancefoundation.org/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பல்துறை வல்லுனர்கள் மூலமாக, முன்னணி உலகளாவிய நிபுணர்களுடன் தொடர்புகொள்வதற்கும், தன்னார்வத் தொண்டு செய்வதற்கும், தன்சார் துறைகளில் திறமையாளர்களாக உருவாகுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வு அடிப்படையில் உதவித் தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறமை வாய்ந்த குழு ஒன்று, மாணவர்களை தேர்வு செய்யும்.

குழந்தைப் பருவத்திலிருந்து உயர்கல்வி வரை உலகத்தரமான கல்விச் சேவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நோக்கமாக கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

First published:

Tags: Reliance Foundation