Home /News /education /

கால்நடை மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம்

கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம்

Veterinary : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பிடெக்) (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (கலையியல் பிரிவு -BVSc AH (Academic) பிரிவில் 22,240 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 21,899 பேர் தகுதி பெற்றுள்ளனர். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (தொழிற்கல்வி BVSc AH (Academic) பிரிவில் 248 மாணவர்கள் விண்ணப்பத்தித்ததில், 245 பேர் தகுதிப்பெற்றுள்ளனர்.

    பிடெக் (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றிக்கு 4,410 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4,315 பேர் தகுதி பெற்றுள்ளனர். இளநிலை கால்நடை மருத்துவப்படிப்பிற்கு விண்ணபித்த 26,898 மாணவர்களில் 26,459 பேர் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் இன்று வெளியிட்டது.

    தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in) வெளியிடப்பட்டுள்ளது.
    மேலும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : TNPSC தேர்வு எழுதும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு

    மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Medical education, Students

    அடுத்த செய்தி