ஹோம் /நியூஸ் /கல்வி /

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்   இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்பில் சேருவதற்காக மாணவர்கள்  ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து சுமார் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org என்கிற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்டாப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Engineering, News On Instagram, Online, Students