செப்டம்பர் 1 முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மாதிரிப் படம்

தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு.

  • Share this:
    செப்டம்பர் 1 முதல் புதுச்சேரி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும், 9முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் ஏ.நமச்சிவாயம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், அனைத்து கல்லூரிகள் மற்றும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    ரங்கசாமி


    Must Read : பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை முக்கிய முடிவு

    அதன்படி, தமிழகத்தைப் போலவே, மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அதிகாரிகள் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், சுழற்சிமுறையில் கல்லூரி வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: