Home /News /education /

வெளியானது பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் - செப்டம்பர் 4 தரவரிசைப் பட்டியல்

வெளியானது பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் - செப்டம்பர் 4 தரவரிசைப் பட்டியல்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை வெளியிடுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதனைதொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கியது.

அதன்படி பி.இ, பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 24ம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில், மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது.

தர வரிசையில் ஒரே கட் ஆப் மதிப்பெண் வரும் மாணவர்களில், முன்னுரிமை மாணவரை தேர்வு செய்ய ரேண்டம் எண் பயன்படுகிறது. ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இருந்தால் யாருக்கு தர வரிசையில் முன்னுரிமை வழங்குவது என்ற  குழப்பத்தை தீர்க்க ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். அந்த வகையில் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்துள்ள இணைய பக்கத்தில் ரேண்டம் எண்ணினை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு 1,74,096 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முன்னதாக, பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 முதல் இன்று (ஆகஸ்ட் 24 ந் தேதி) வரையில்    www.tneaonline.org www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று வரை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைஅடுத்து இன்று பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கலந்தாய்விற்கான அடுத்த கட்ட பணிகள் தொடங்க உள்ளது.

கலந்தாய்வு விபரம்

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ந் தேதி வெளியாகிறது.

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7 ந் தேதி முதல் 11 ந் தேதி வரையிலும், பொதுப்பிரிவுக் கலந்தாய்வு செப்டம்பர் 14 ந் தேதி முதல் அக்டோபர் 4 ந் தேதி வரையில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Anna University

அடுத்த செய்தி