Home /News /education /

ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம் அனைத்தும் இலவசம் - இராமகிருஷ்ண மிஷன் அறிவிப்பு

ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம் அனைத்தும் இலவசம் - இராமகிருஷ்ண மிஷன் அறிவிப்பு

ராமகிருஷ்ண மிஷன்

ராமகிருஷ்ண மிஷன்

Ramakrishna Mission | சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளது.

    பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என இராமகிருஷ்ண மிஷன் அறிவித்துள்ளது.

    தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் தங்குமிடத்துடன் இலவசக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர் இல்லத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 6ம் வகுப்பிலும்,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிப்ளமோ படிப்பில் சேரவும் , 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 2 ஆம் ஆண்டிலும் கல்வி கற்க தகுதிபெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இங்கு உணவு, தங்குமிடம், கல்வி ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் அறிவித்துள்ளது.

    விருப்பமுள்ளவர்கள் www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044 - 24990264, 044 - 42107550 என்ற எண்களுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Education

    அடுத்த செய்தி