Home /News /education /

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு அதிகரிப்பு! அதிர்ச்சியில் பெற்றோர்..

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு அதிகரிப்பு! அதிர்ச்சியில் பெற்றோர்..

இதுவரை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பில் 5 வயதில் பிள்ளைகளை சேர்க்கலாம் என்ற வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பில் 5 வயதில் பிள்ளைகளை சேர்க்கலாம் என்ற வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பில் 5 வயதில் பிள்ளைகளை சேர்க்கலாம் என்ற வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இந்த பள்ளிகளில், 1ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் போது அந்த ஆண்டு மார்ச், 31 அல்லது ஏப் 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக உள்ளது.

கல்லூரிகளில் ஆன்லைன் பட்டபடிப்புக்கு யூஜிசி அனுமதி.. நேரடி படிப்புக்கு இணையானது என அறிவிப்பு

இந்நிலையில் வரும், 2022- 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 1ம் வகுப்பில் சேரும் மாணவர்கள், புதிய கல்வி கொள்கையின்படி, 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதில் மாணவர்களுக்கு 6 வயது முடிந்திருக்க வேண்டுமா அல்லது 5 வயது முடிந்து, 6 வயதில் இருக்க வேண்டுமா என்ற தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே, 5 வயது நிறைவடைந்தால் போதும் என்ற நிலையில் தற்போது 1ம் வகுப்பில் சேர்க்க 6 வயது நிறைவடைய வேண்டும் என, திடீரென வயது வரம்பை உயர்த்துவதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்த்துவிடலாம் என்று நினைத்திருந்த பெற்றோர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கூடுதல் விபரங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை kvsangathan.nic.in/ என்ற இணையதளத்திலும், ஆன்லைன் பதிவு விபரங்களை, kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: CBSE, Kendriya vidyalaya

அடுத்த செய்தி