Home /News /education /

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் மனதில் எழும் கேள்விகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் மனதில் எழும் கேள்விகள்

தமிழ்நாட்டில் நாளை முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பெற்றோர் மனதில் எழும் கேள்விகளை இப்போது பார்க்கலாம்.

    1. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் பணம் கொடுத்து தரமான முகக்கவசம் வாங்க முடியுமா?

    2. அரசுப் பள்ளி மாணவர்கள் துணியால் ஆன முகக்கவசம் அணிந்து வரலாமா?

    3. தரம் குறைந்த துணி மாஸ்கில் இருந்து தொற்று பரவாதா?

    4. நியாய விலைக் கடைகளில் மாஸ்க் வழங்கும் திட்டம் என்ன ஆயிற்று?

    5. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச முகக்கவசம் கிடைக்குமா?

    6. பேருந்துகளில் வருவதைத் தவிர்க்க அரசு கூறியுள்ளது. அனைத்து மாணவர்களாலும் அப்படி வர முடியுமா?

    7. சீருடை அணியாத இதர பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக செல்ல முடியுமா?

    8. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா?

    9. இடைவேளைகளில் மாணவர்கள் கூடுவதை அரசுப் பள்ளிகளில் கட்டுப்படுத்த முடியுமா?

    10. உணவு இடைவேளையின்போது மாஸ்க் இல்லாமல் மாணவர்கள் அமருவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?

    11. ஒரு இருக்கையில் இருவர் மட்டும் அமருவது அரசுப் பள்ளியில் சாத்தியமா?

    12. சானிடைசரை சுகாதாரத் துறை வழங்கவுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் தரப்படுமா?

    13. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என முன்கூட்டியே அறிவிக்கப்படுமா ?

    14. பள்ளிகளுக்கு வராமல் ஆன்லைனில் படிப்போருக்கு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுமா?

    இக்கேள்விகளுக்கு தெளிவான விடை கிடைத்தால் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் மனநிம்மதி அடைவர். அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: School open

    அடுத்த செய்தி