Home /News /education /

12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானது எப்படி? பள்ளிக்கல்வி துறை விளக்கம்

12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானது எப்படி? பள்ளிக்கல்வி துறை விளக்கம்

பள்ளி தேர்வு

பள்ளி தேர்வு

Revision Exam | சில தேர்வுகளுக்கான வினாத்தாள்‌ தேர்வு நடைபெறும்‌ முன்பே சமூக வலைத்தளங்களில்‌ வெளிவந்ததாக செய்தி ஊடகங்கள்‌ வழியாக அறியப்பட்டதன்‌ அடிப்படையில்‌, துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்‌ இரண்டு பள்ளிகளிலிருந்து வெளியானது கண்டறியப்பட்டுள்ளது என்றும், திட்டமிட்டபடி திருப்புதல்‌ தேர்வுகள்‌ எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது‌.

    தமிழ்நாட்டில்‌ மாநில பாடத்திட்டத்தின்‌ (State Board) நகல்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 10 மற்றும்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு 09.02.2022 முதல்‌ திருப்புதல்‌ தேர்வுகள்‌ தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில்‌, சில தேர்வுகளுக்கான வினாத்தாள்‌ தேர்வு நடைபெறும்‌ முன்பே சமூக வலைத்தளங்களில்‌ வெளிவந்ததாக செய்தி ஊடகங்கள்‌ வழியாக அறியப்பட்டதன்‌ அடிப்படையில்‌, துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வில்‌, திருவண்ணாமலை மாவட்டம்‌, போஜூர்‌, ஆக்சிலியம்‌ மெட்ரிக்‌ மேல்நிலைப்‌ பள்ளி மற்றும்‌ வந்தவாசி, ஹாசினி இன்டர்நேஷனல்‌ மெட்ரிக்‌ மேல்நிலைப்‌ பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலிருந்து வினாத்தாள்‌ வெளியானது கண்டறியப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - 'நீங்கள் உடற்பயிற்சி செய்வதை பார்க்கவா மக்கள் வாக்களித்தனர்?' - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

    இதற்குக்‌ காரணமான பள்ளிகளைச்‌ சார்ந்த நபர்களின்‌ மீது தக்க குற்றவியல்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, இத்தேர்வுகள்‌ நடத்துவது குறித்து தேர்வுத்துறை இயக்குநர்‌ அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள்‌ மீது துறை ரீதியான நடவடிக்கையும்‌ எடுக்கப்படும்‌. ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல்‌ தேர்வுகள்‌ எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே கணிதம், அறிவியல் தேர்வுகளுக்கான வினாத்தாள் நேற்று வெளியான நிலையில் இன்று வணிகவியல் வினாத்தாள் சென்னையில் வெளியானது. திருப்புதல் தேர்வுகளை பொதுத் தேர்வுகள் போன்று நடத்த வேண்டுமென்று பள்ளிக்கல்வி உத்தரவிட்டு இருந்தது.

    இதனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயார் செய்யப்பட்டு மாணவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக இவை அளிக்கப்படும் நிலையில் வினாத்தாள்கள் தொடர்ந்து வெளியாவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Exam, School

    அடுத்த செய்தி