நீட் தேர்வில் வெற்றி பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி மருத்துவப் படிப்பை தேர்வு செய்துள்ளனார்.
எம்பிபிஎஸ் , பி டி எஸ் ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோர் பங்கு கொள்ளும் சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது.
மொத்தம் 46 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த நவதாரணி என்ற மாணவி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை தேர்வு செய்துள்ளார். பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் 102 மதிப்பெண்களை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி நவதாரணியின் தந்தை ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த நவதாரணி, தனது மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை இலக்காக வைத்து தற்போது சாதித்தும் காட்டியுள்ளார். இது தொடர்பாக நவதாரணி கூறுகையில், என் உடல் வளர்ச்சி குறித்து கேலி செய்வார்கள். அப்போது வருந்தினாலும் நாளடைவில் அதை மறந்து சாதிக்க நினைத்தேன்’ என தெரிவித்தார். சாதிக்க உயரம் தடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Surya, Agaram Foundation, Medical counseling, Neet Exam