ஹோம் /நியூஸ் /கல்வி /

அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்.. புதுச்சேரியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மழலையர்...

அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்.. புதுச்சேரியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மழலையர்...

மழலையர்

மழலையர்

Puducherry : புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் வகுப்புகள் திறக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி கல்விதுறை இயக்குனர் தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா தொற்று பரவலை தடுக்க புதுச்சேரியில் 2020ல் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்று குறையும்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிகரிக்கும் போது மூடப்பட்டு வந்தன. பின்னர், கொரோனா பரவல் குறைந்தவுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் 2020 முதல் மழலையர் வகுப்புகள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில் கொரோனா  பரவல் வெகுவாக குறைந்ததால் புதுச்சேரியில் மழலையர் பள்ளிகளை திறக்க அரசு முடிவுசெய்து அறிவித்தது. இதன்படி இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் திறக்கப்பட்டன. காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 2 ஆண்டுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டாதால், பல குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த ஆசிரியர்கள் கிருமிநாசினி வழங்கி வகுப்பறைக்கு அனுப்பினர்.

சில குழந்தைகள் பள்ளிக்கு வர மறுப்பு தெரிவித்து பெற்றோரை விட்டு அகலவில்லை. அவர்களுக்கு சாக்லெட், பென்சில் போன்ற பரிசு பொருட்களை கொடுத்து சமாதானம் செய்து ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அழைத்துச்சென்றனர். கொரோனா காலத்தில் பலரும் வேலை இழந்தும் வருமானம் குறைந்தும் இருந்தனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாமல், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களை பெற்றோர் அரசுக்கு பள்ளிக்கு மாற்றி வருகின்றனர்.

அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

இந்த நிலையில் புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு தனது மகன் அசுகோஷை லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று சேர்த்தார். அவரே பள்ளிக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி முதல்வரிடம் அளித்து, தனது மகனை மழலையர் வகுப்பில் சேர்த்தார்.

Read More : சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

மழலையர் பள்ளி

அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர் என குற்றச்சாட்டு நிலவுகிறது. அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Must Read : தொடரும் போர்... உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை போலந்துக்கு மாற்ற முடிவு

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் முன்னுதாரணமாக தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது, அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. மழலையர் வகுப்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளதால் அடிப்படை கல்வி சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

Published by:Suresh V
First published:

Tags: LKG, Puducherry, School education, UKG