புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் பயிலும், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை அனுப்பட்டுவரும் நிலையில், அரசு பள்ளிகளில் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைவாக இருந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை அவரவர் பெற்றோர்களின் செல்போன்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் தேதி வாரியாக பாடங்களுக்கான தேர்வுகள் குறித்த விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி பள்ளிகளில் சமர்ப்பிக்க மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகளை இம்மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடர்பான அட்டவணை எதுவும் வெளியிடப்பட்டவில்லை.
Must Read : மாநில பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 165 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்..
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தேதி மற்றும் அட்டவணை குறித்த எந்த தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் தேர்தல் தேதி மற்றும் அட்டவணை வெளியிடப்படாதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.