புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவயம் வெளியிட்டார். அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 92.92 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் நமச்சிவாயம்,
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 15,515 -மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதில் 15346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.92 சதவீதம் என தெரிவித்தார்.
புதுச்சேரியிலுள்ள 292 பள்ளிகளில் 114 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அரசு பள்ளிகளில் 85.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார். 11ஆம் வகுப்பு சேரக்கூடிய மாணவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என்றும் 23 ஆம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
கல்வித்துறையால் தொடரப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அவர், மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என கூறினார்.
மேலும் படிக்க: புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.13% பேர் தேர்ச்சி.. கடந்த முறையை விட அதிகம்
இதேபோல், புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் 12ம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு 96.13 சதவீதம் எனவும் கடந்த முறையை விட இது 4.81 சதவீதம் கூடுதல் எனவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.