Home /News /education /

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : பிப்ரவரி 11 முதல் கலந்தாய்வு

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : பிப்ரவரி 11 முதல் கலந்தாய்வு

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்

வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்

Agriculture Rank List 2022 : வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த என்.பூர்வா ஸ்ரீ 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளமறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு  2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் இன்று முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத்தலைவர்கள், உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முதன்மையர்கள் கலந்துகொண்டார்கள்.

    இத்த தரவரிசைப்பட்டியலில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த என்.பூர்வா ஸ்ரீ 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.  நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த  D.G.புஷ்கலா 199.00 மதிப்பெண்கள் பெற்றும், இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சாஜின் 198.75 மதிப்பெண்கள் பெற்றும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர் என்று முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர்சேர்க்கை)  தெரிவித்தார்.

    பல்கலைக்கழக செயல் துணைவேந்தர், தமிழக அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்ட தரவரிசைபட்டியலையும் வெளியிட்டார். இதில் அரசுப்பள்ளியில் படித்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த  பி.பவித்ரா 193.33  மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும், பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் செயல் துணேவேந்தர் அவர்களால் வௌயிடப்பட்டது, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த  அனுஜா 200க்கு 191.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்ட் எடிசன் 189.68 மதிப்பெண்கள் பெற்றும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராம்பிரசாத் 189.50 மதிப்பெண்கள் பெற்றும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.

    வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலில்  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனுபா 200க்கு 191.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த  அனுஜா   190,03 மதிப்பெண்கள் பெற்றும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த  கைலாஷ் சங்கர் 189.99 மதிப்பெண்கள் பெற்றும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.

    Must Read : நகர்புற உள்ளாட்சி தேர்தல் : பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

    கலந்தாய்வு முறை மற்றும் கலந்தாய்வு தேதி குறித்த விவரங்கள் பின்வருமாறு. வ.எண். விவரங்கள் தேதி கலந்தாய்வு முறை

    1)  முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 11.02.2022 முற்பகல் நேரடி கலந்தாய்வு.

    2) மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 11.02.2022 முற்பகல் நேரடி கலந்தாய்வு

    3)  சிறந்த  விளையாட்டு  வீரர்கள் 11.02.2022 பிற்பகல் நேரடி கலந்தாய்வு

    4) தொழிற்முறைக் கல்வி பிரிவினர் 14.02.2022 மற்றும் 15.02.2022 நேரடி கலந்தாய்வு

    5) அரசுப் பள்ளியில் பயின்றோர்(7.5%) 17.02.2022 மற்றும் 18.02.2022 நேரடி கலந்தாய்வு

    6) பொதுக்கலந்தாய்வு -  21.02.2022 முதல் 23.02.2022 வரை இணையவழி கலந்தாய்வு

    7) கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 25.02.2022 இணைய வழிகலந்தாய்வு

    8) சான்றிதழ் சரிபார்ப்பு 02.03.2022 முதல் 05.03.2022 வரை நேரடி வருகை

    9) முதல் நகர்வு பட்டியல் (1) மற்றும் கல்லூரி,  பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 08.03.2022 இணையவழிகலந்தாய்வு

    10) சான்றிதழ் சரிபார்ப்பு - II 11.03.2022 முதல் 13.03.2022 வரை நேரடி வருகை

    Read More : பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

    11)  இரண்டாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி,  பாடப்பிரிவு இடஒதுக்கீடு 16.03.2022 இணைய வழி கலந்தாய்வு

    12 ) வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு 17.03.2022 நேரடி கலந்தாய்வு

    13)  வேளாண் தொழில் நிறுவனங்களுக்கான இடஒதுக்கீடு 18.03.2022 நேரடி கலந்தாய்வு

    14)  சான்றிதழ் சரிபார்ப்பு 19.03.2022 முதல் 21.03.2022 வரை நேரடி வருகை

    15)  மூன்றாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி,  பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 24.03.2022 இணைய வழிகலந்தாய்வு

    பட்டயப்படிப்புகளுக்கான கலந்தாய்வு பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) அவர்கள் தெரிவித்தார்கள்.

    செய்தியாளர் :  சுரேஷ், தொண்டாமுத்தூர், கோவை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Agriculture, Coimbatore, Counseling

    அடுத்த செய்தி