• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • தமிழகம் மற்றும் புதுவையில் 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இன்று துவங்கியது!

தமிழகம் மற்றும் புதுவையில் 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இன்று துவங்கியது!

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் மற்றும் புதுவையில் 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு இன்று துவங்கியது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  இன்று முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் தேர்வினை 8,26,119 பேர் எழுதுகின்றனர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், இன்று தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி 15 நிமிடம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7,400 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, 8,26,119 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 6,356 பேரும் என 8,32,475 பேர் புதிய பாடத்திட்டத்தில் எழுதவுள்ளனர்.

மாணவிகள் 4,40,252 பேரும், மாணவர்கள் 3,85,867 பேரும் எழுதுகின்றனர். இதில் மாணவர்களின் எண்ணிக்கையை விட மாணவிகள் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடதக்கது. 54085 மாணவிகள் மாணவர்களை விட கூடுதலாக எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சென்னை மாவட்டத்தில் உள்ள 411 பள்ளிகளில் படித்த 46,779 மாணவர்கள் 159 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

வேலூர், சிறைகளிலுள்ள 100 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.

தேர்வின் போது தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வுகளின் முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: