2023-24 ஆண்டிற்கான சட்டமியற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கீழ் பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கான (Legislative Assistants to Members of Parliament (LAMP) விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளம் தலைமுறையினர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
PRS Legislative Research என்ற ஆய்வு நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும் தேர்வர்கள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கீழ் ஓராண்டுகாலம் முழுநேரப் பணியில் பயிற்சி பெறுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கீழ் ஓராண்டு காலம் முழுநேர பணிகளில் ஈடுபட வேண்டும். உறுப்பினரின் நாடாளுமன்ற பணிகளில் விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பணிகளில் ஈடுபட வேண்டும். நாடாளுமன்றக் கேள்விகள் வரைவு செய்வது, பூஜ்ஜிய நேர விவாதங்களுக்கு உரைகளைத் தயாரிப்பது, பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்பதுவது, தனிநபர் மசோதாக்களை வரைவு செய்வது இதில் அடங்கும்.
யார் விண்ணப்பிக்கலாம்:
25 வயதுக்கு மிகாமல் மாணவர்கள் இந்த பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவு முறை?
இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் சமரிப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் 2 தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டும்.
தலைப்பு 1- அரசின் கொள்கை ( உதரணாமாக, ஸ்டார்ட் அப் இந்தியாவில் திட்டத்தின் சாதக/ பாதகங்கள் என்ன? விவாசாயத் துறையில் ஸ்டார்ட் அப் தேவைகள், பெண்கள் வேலைவாய்ப்பை அதிகரிப்பது எப்படி?) அல்லது சட்டம் (உதாரணமாக, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டத்தின் செயலாக்கம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம், கொரோனா பெருந்தொற்றும், புலம் பெயர் தொழிலாளர் சட்டமும் )
தலைப்பு 2 : நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காரணங்களை அடிக்கி கட்டுரை எழுத வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், 2023 ஜனவரி 8, அன்று நடத்தப்படும் ஆன்லைன் மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
இது முழு நேர பணியாகும். வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள், Harvard, Yale, Columbia, Oxford, London School of Economics என உலகம் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர்.
ஊக்கத்தொகை: மாதம் ரூ.20,000/-
விண்ணப்பம் செய்வது எப்படி?
LAMP applications for 2023-24 என்ற இணைய பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி: 29:12.2022
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parliament