ஹோம் /நியூஸ் /கல்வி /

கேட் மதிப்பெண்கள் இல்லாமல் முதுநிலை சான்றிதழ் படிப்பு: ஐஐடி கான்பூர்

கேட் மதிப்பெண்கள் இல்லாமல் முதுநிலை சான்றிதழ் படிப்பு: ஐஐடி கான்பூர்

ஐஐடி கான்பூர்

ஐஐடி கான்பூர்

IIT Kanpur | இளநிலை பொறியியல் படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆன்லைன் மூலம் பிளாக்செயின் தொழில்நுட்பம் தொடர்பான முதுநிலை பட்டப்படிப்புத் திட்டத்தை ஐஐடி கான்பூர் நிறுவனம் தொடங்கியது.

  பொதுவாக, வயது வரம்பு, கல்வித் தகுதி, காலியிடம் போன்ற பல்வேறு காரணங்களினால் ஐஐடி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மிகவும் கெடுபிடியாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது வழக்கமான சேர்க்கை செயல்முறைகளுக்கு மாறாக, கேட் மதிப்பெண்கள் இல்லாமல் மாணவர் சேர்ககையை ஐஐடி கான்பூர் தொடங்கியுள்ளது.

  பொது சுகாதாரம், ஃபின்டெக் (நிதி தொழில்நுட்பம்), விநியோக சங்கிலி மேலாண்மை ஆகிய துறைகளில் பிளாக்செயின் (Blockchain) தொழிற்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகள் காண விளையும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

  பயிற்சி காலம்:  4 மாதம். ஜூன் 25 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறும். ஒரு வாரத்தில் தோராயமாக 5 முதல் 10 மணி நேர பயிற்சி வகுப்புகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இளநிலை பொறியியல் படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஜாவா நிரலாக்கள் மொழி தெரிந்தவர்கள், கணிதறிவு கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  simple learn என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபங்கள் பெறப்பட்டு வருகின்றன. வரப்பெற்ற விண்ணப்பபங்களில்  இருந்து தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

  பயிற்சி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி கான்பூரில் இருந்து முறைப்டி சான்றிதழ் வழங்கப்படும்.

  ஆர்வமுள்ளவர்கள், Simple learn என்ற இணையப்  பக்கத்திற்கு சென்று Professional Certificate Program in Blockchain என்று தேட வேண்டும்.

  Blockchain Certification

  Published by:Salanraj R
  First published:

  Tags: Education