அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் எழுந்த பெரிய சிக்கல்

அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி என அரசு அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் எழுந்த பெரிய சிக்கல்
(கோப்பு படம்)
  • Share this:
அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி அடையச்செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விமர்சனத்தையும் ஒருபுறம் வரவேற்பையும் பெற்றுள்ளது

இந்த நிலையில் அரியர் வைத்திருந்த பல மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் வரவில்லை என தெரியவந்துள்ளது. அதாவது பல மாணவர்கள் முந்தைய செமஸ்டர்களில் பெற்ற  எக்ஸ்டர்னல் (External) மற்றும் இண்டர்னல் (Internal) மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மேலும் படிக்க...மீண்டும் உச்சத்தில் பெட்ரோல் விலை - இன்றைய நிலவரம் என்ன?


மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் வழிகாட்டுதல் ஆகும். அந்தவகையில் அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி வழங்குவது எவ்வாறு என்கிற கேள்வி எழுந்துள்ளது.


இதனால் அரியர் மாணவர்களுக்கு எவ்வாறு விதிகளுக்குட்பட்டு தேர்ச்சி வழங்குவது என்கிற குழப்பம் பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading