முகப்பு /செய்தி /கல்வி / தொழில்நுட்ப குளறுபடியால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்..

தொழில்நுட்ப குளறுபடியால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்..

கோப்புப் படம்

கோப்புப் படம்

தொழில்நுட்பக் கோளாறால் கலை அறிவியல்  படிப்பிற்கான  விண்ணப்பத்தின் போது ஆன்லைனில் கலை படிப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடிவதாக புகார் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று மாலை துவங்கியது. இந்த மாத 31-ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆன்லைனில் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கின்றபோது கலை படிப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடிவதாக புகார் எழுந்துள்ளது.

அறிவியல் படிப்புகளான கணிதம், வேதியியல், இயற்பியல் , தாவரவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

மேலும் படிக்க...

12-ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு விடைத்தாள் நகல் பெறுவதற்கான தேதி அறிவிப்பு எப்போது?

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டபோது மென்பொருள் குளறுபடி காரணமாக இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் விரைவில் அதனை சரி செய்து விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: College Admission, Online application