school admission | தனியார் பள்ளி இலவச இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கோப்புப் படம்

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் உள்ள, 1.34 லட்சம் இடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தனியார் பள்ளிகளில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளுக்கான, 25 சதவீத ஒதுக்கீடு இடங்களுக்கு, ஜூலை 5-ஆம் தேதி முதல் , ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தி்ல் 3696 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளிட்ட, நர்சரி, பிரைமரி பள்ளிகளையும் சேர்த்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.  இவற்றில் உள்ள 1,34,400 இடங்கள் நிரப்பப் பட உள்ளன. இந்த இடங்களின் விவரங்களை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையிலும், பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்திலும் ஜூலை 3 ந் தேதி வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... vaccination Centers | இந்தியாவில் கூடுதலாக 2 தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

    மாணவர்களின் பெற்றோர் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும்,  விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் இருப்பிடம், பள்ளியிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் மாணவரின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published: