Home /News /education /

நாளை தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்: போராட்டம் வாபஸ்

நாளை தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்: போராட்டம் வாபஸ்

காட்சிப் படம்

காட்சிப் படம்

நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

    நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புனர் மேற்கொண்ட சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 12ம் வகுப்பு   மாணவி கடந்த 12ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் ஊர் பொது  மக்கள் போராட்டம்  நடத்தி வந்தனர். நேற்று, இந்த போராட்டம் வன்முறை கலவரமாக மாறியது.

    நூற்றுக்கணக்கானோர் நேற்று ஒன்று திரண்டு பள்ளியின் உடமைகளை சேதப்படுத்தினர். கிட்டத்தட்ட 5000 மாணவர்களின் பள்ளி சான்றிதழ்கள் தீக்கிரைக்காக்கப்பட்டன. போராட்டக்காரர்களின் இந்த செயலைக் கண்டிக்கும் விதமாக, தமிழகத்தில் இன்று ஒருநாள் முழுவதும் தனியார் பள்ளிகள் செயல்படாது என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

    இதையும் வாசிக்கநீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொல்லி மோசமாக நடத்தியதாக அலுவலர்கள் மீது புகார்

    இந்நிலையில், உயிரிழந்த பள்ளி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த மறுபரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், சோதனையின் போது மனுதாரரின் வழக்கறிஞர் உடனிருக்கலாம் என்றும் தெரிவித்தார். 

    இன்று பள்ளி செயல்பட தடை அறிவித்திருந்தாலும், தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன. குறிப்பாக, கள்ளக்குறிச்சியில் 92% பள்ளிகள் எவ்வித பிரச்னையுமின்றி செயல்பட்டதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

    இதற்கிடையே,  பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புனர் சந்திப்பு மேற்கொண்டது.இந்த சந்திப்பின்  முடிவில், நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Kallakurichi

    அடுத்த செய்தி