• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • நவீன வாக்கு இயந்திரம் வடிவமைத்ததற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு கவுரவம்!

நவீன வாக்கு இயந்திரம் வடிவமைத்ததற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு கவுரவம்!

எனினும், பண வசதி இல்லாததால், கருவியை உருவாக்க முடியாமல் தவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆதார் எண் மற்றும் கைரேகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த, தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிசு வழங்குகிறார்.

    சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் விஷால், சுதர்சன், சுஷில் ஆகியோர் கடந்த ஆண்டு நவீன வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தனர்.

    இதில் குறிப்பிட்ட வாக்காளரின் ஆதார் எண் மற்றும் கைரேகை பொருத்தினால் மட்டுமே அவர் தனது வாக்கினை பதிவு செய்ய முடியும், மேலும் ஒருவர் எந்த இடத்தில் இருந்தாலும் தனது தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வசதியை மாணவர்கள் தாங்கள் வடிமைத்த புதிய இயந்திரத்தில் சேர்த்துள்ளனர்.

    மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் விதமாக இன்று டெல்லியில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த மாணவர்களை கவுரவிக்க உள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: