12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 பேர் எழுதுகின்றனர்.
இதே போன்று 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர்.
இந்நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக மார்ச் 1 முதல் 4 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக மார்ச் 6 முதல் 9 ஆம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. இயற்பியில், வேதியியல், உயிரியல், தாவரவியல், கணினி அறிவியல், தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுதுகின்றனர்.
இதையும் படிங்க; 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 11th Exam, 12th exam, Public exams