முகப்பு /செய்தி /கல்வி / பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Semester Exam | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதியன்று நடைபெற உள்ளதால் தேதியை ஒத்தி வைத்து அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதியன்று நடைபெற உள்ளதால் தேதியை ஒத்தி வைத்து அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே உயர்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் 19 ந் தேதி குறிப்பிட்ட சில பாடங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read : கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதில் மாற்றம் இல்லை - அமைச்சர் பொன்முடி

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்றைய தேதியில் நடைபெற இருப்பதன் காரணமாக அன்றைய தேதியில் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதம் 5, 6 ,9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

First published:

Tags: Anna University