Home /News /education /

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வா? நேரடி தேர்வா? - அமைச்சர் க.பொன்முடி பதில்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வா? நேரடி தேர்வா? - அமைச்சர் க.பொன்முடி பதில்

 க.பொன்முடி

க.பொன்முடி

University exam : கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

    சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியளர்களை சந்தித்தார். அப்போது போசிய அவர், கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

    இது குறித்து அமைச்சர் க.பொன்முடி கூறுகையில், பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரிமாதம் நடைபெறும் என அறிவித்து இருந்தோம்.

    இந்நிலையில், அனைத்து பல்கலை தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மற்றபடி தேர்வு எப்படி நடத்துவது என்பது குறித்து பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    Must Read : வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சித் தயாரிப்பு முடக்கம்? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    அதன்படி, ஆன்லைன் தேர்வா? இல்லை நேரடி தேர்வா என கொரோனா தாக்கத்தைப் பார்த்துதான் முடிவு செய்யப்படும். இதுகுறித்து இப்போது கூற முடியாது என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: College, Exam, Ponmudi, University

    அடுத்த செய்தி