Home /News /education /

முதுகலை ஆசிரியர் தேர்வு கால அட்டவணை வெளியிடு

முதுகலை ஆசிரியர் தேர்வு கால அட்டவணை வெளியிடு

  முதுகலை ஆசிரியர் தேர்வு கால அட்டவணை வெளியிடு

முதுகலை ஆசிரியர் தேர்வு கால அட்டவணை வெளியிடு

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 2207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, முதுகலை கணினி ஆசிரியர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் நவம்பர் 14ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் பெற்றது.

இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு எழுத இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதற்கான எழுத்துத் தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதிவரை காலை மாலை இருவேளைகளிலும் தேர்வு நடத்தபடுகிறது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்ட் பதிவுசெய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் ஆங்கிலம், கணக்கு, கம்ப்யூட்டர் அறிவியியல் பாடங்களுககான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும். இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்றின் சூழ்நிலையை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.

Also Read : பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பிப்ரவரி 12 ந் தேதி தமிழ், பிப்ரவரி 13 ந் தேதி வணிகவியல், மனை அறிவியியல், இந்திய கலாச்சாரம், இயற்பியல், பிப்ரவரி 14 ந் தேதி புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல், பிப்ரவரி 15 ந் தேதி தாவரவியல், உயிர் வேதியியல், விலங்கியல், உடற்கல்வி இயல் தேர்வுகள் நடைபெறும் அறிவித்துள்ளார்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி