முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு
Post Graduate Teacher Examination date Extension : தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம்நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வரும் 14ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020 - 2021ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.01/2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது, தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இணையவழி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் மேற்கான பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றது என அறிவிக்கப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.