முகப்பு /செய்தி /கல்வி / கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதில் மாற்றம் இல்லை - அமைச்சர் க.பொன்முடி

கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதில் மாற்றம் இல்லை - அமைச்சர் க.பொன்முடி

க.பொன்முடி

க.பொன்முடி

Ponmudi : கல்லூரிகள் திறக்கப்படும் ஆனால் கல்லூரிகளில் ஏற்கனவே அறிவித்தபடி பருவ யேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கல்லூரிகளில் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விழுப்புரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலகங்களில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வுகள் முடிந்த பின்னர் கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், கல்லூரிகளில் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறுகையில், நேற்று தமிழக முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகள் அறிவித்துள்ளார்கள். அதில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்படும் ஆனால் கல்லூரிகளில் ஏற்கனவே அறிவித்தபடி பருவ யேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். பிராக்டிகல் தேர்வுக்கு மாணவர்கள் வர வேண்டும். பொறியல் கல்லூரி திறக்கப்பட்டு செயல்படும்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவலால் பிப்ரவரி 1 ஆம் தேதி ஆன்லைன் வழியாக நடைபெறும் என ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம். தற்போது கல்லூரிகள் திறக்கப்படுவதால், ஆன்லைன் தேர்வில் மாற்றம் ஏற்படுமா என பலர் சந்தேகிக்கின்றனர். ஆன்லைன் தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம் ஆனால் மற்ற நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டும்.

Read More : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு... தேர்தலில் எவ்வளவு செலவிடலாம்?

முதல், மூன்றாம் மற்றும் ஐந்தாம் பருவ செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியாகவே நடைபெறும். ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

Must Read : சுழற்சி முறை இல்லாமல் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

மேலும், தமிழகத்தில் இரு மொழி கொள்ளையை தீவிரமாக பின்பன்றுவோம். விரும்பும் மாணவர்கள் எந்த மொழியையும் படித்துக்கொள்ளலாம் என்று கூறினார். வட மாநிலத்தில் தமிழ் விருப்ப பாடமாக உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் பொன்முடி கால்லூரி கட்டிடங்கள் பழுதடைந்திருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கபப்டும் என்று தெரிவித்தார்.

First published:

Tags: College, Exam, Ponmudi