Pondicherry University | புதுச்சேரி பல்கலை. கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான தேர்வு: திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஏப்ரல் மாதம் நடத்த வேண்டிய தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஏப்ரல் மாதம் நடத்த வேண்டிய தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

  • Share this:
elபுதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் எதிரொலியால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளையும் ஒத்திவைப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஏப்ரம் மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஏப்ரல் மாதம் நடத்த வேண்டிய தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வை ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரை நடத்த தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேர்வு தேதி பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டிய தேர்வுகளை ஜூலை 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டிய தேர்வுகளை ஜூலை 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் மே 4ஆம் தேதி நடத்த வேண்டிய தேர்வை ஜூலை 17ஆம் தேதியன்று நடத்த பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு உத்தரவிட்டுள்ளது.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அந்தமான் தீவுகளில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஜூலை 26ஆம் தேதி தேர்வுகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரம் www.pondiuni.edu.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Archana R
First published: