ஹோம் /நியூஸ் /கல்வி /

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிப்பது எப்படி?

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிப்பது எப்படி?

புதுவைப் பல்கலைக்கழகம்

புதுவைப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் www.pondiuni.edu.in/admissions-2022-23/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில்  வரும் 15ம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  2022-23 கல்வியாண்டுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  மத்தியப் பல்கலைக்கழக தகுதித் தேர்வில் ( CUET-PG முதுநிலை பட்டப்படிப்பு) 2022 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

  புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் www.pondiuni.edu.in/admissions-2022-23/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில்  வரும் 15ம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

  இதையும் வாசிக்கராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர நுழைவுத் தேர்வு அறிவிப்பு :யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

  மேலும்,  2022-23 கல்வியாண்டிலிருந்து எம்.எஸ்சி. (புவிஇயற்பியல்- Geophysics) இப்பல்கலைக்கழத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (முதுநிலை பட்டப்படிப்பு) – 2022-ன் தேர்வுத்தாள் குறியீடு எண் PGQP08-ல் தேர்வு எழுதியவர்கள், இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

  Published by:Salanraj R
  First published: