• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • Polytechnic Results | பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு

Polytechnic Results | பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம் .

  • Share this:
    தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற முதலாம், மூன்றாம் மற்றும் ஏழாம் பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தா் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 2,28,441 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும் 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தங்கள்  தேர்வு முடிவுகளை அறியலாம் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மேலும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம் . தேர்வுக்கான கட்டணத்தை ஜூன் 4ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். 2,4,6 வது செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகள், ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் , ஜூலை 14 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: