Home /News /education /

அதிகரிக்கும் காய்ச்சல்... தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

அதிகரிக்கும் காய்ச்சல்... தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத்தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது - ராமதாஸ் ட்விட்டர் செய்தி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல் பரவி வரும் நிலையில், 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது; ''தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் எச்1என்1, சளிக் காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகைக் காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

    இன்னொரு புறம் டெங்கு காய்ச்சலும் வேகமாகப் பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்!



    தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்!

    இதையும் வாசிக்கசிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு

    குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத்தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: PMK, Ramadoss

    அடுத்த செய்தி