தமிழின் தொன்மையை சந்தேகிக்கும் வகையில் இடம்பெற்ற தகவல்களை நீக்க வேண்டும்- ராமதாஸ்

தீவு கிராமமான இருக்கம் மாணவர்கள் அனுதினமும் கல்விக்காக ஒரு சாகசப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

News18 Tamil
Updated: July 26, 2019, 10:01 PM IST
தமிழின் தொன்மையை சந்தேகிக்கும் வகையில் இடம்பெற்ற தகவல்களை நீக்க வேண்டும்- ராமதாஸ்
ராமதாஸ்
News18 Tamil
Updated: July 26, 2019, 10:01 PM IST
தமிழை விட சமஸ்கிருத மொழியே தொன்மையான மொழி என 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பதிவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் கி.மு. 300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு ஆங்கில நூலில் தமிழை விட தொன்மையான மொழி சமஸ்கிருதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு ஆகும். தமிழ் செம்மொழி தொடர்பான அந்தப் பாடத்தில் தேவையற்ற இந்தத் தகவல் திணிக்கப்பட்டிருப்பது ஏன்?

தமிழின் தொன்மையை சந்தேகிக்கும் வகையில் பாடநூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அடங்கிய வினா நீக்கப் பட வேண்டும். இதன் பின்னணியில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...