முகப்பு /செய்தி /கல்வி / CBSE Results: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து: உள்மனம் சொல்வதை பின்பற்றுமாறு அறிவுரை

CBSE Results: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து: உள்மனம் சொல்வதை பின்பற்றுமாறு அறிவுரை

மோடி

மோடி

மனிதகுலம் எதிர்கொண்ட மாபெரும் சவால்மிக்க காலத்தில் இவர்கள் தேர்வுகளுக்கு தயார் செய்து அவற்றில் வெற்றி பெற்றுள்ளனர் - பிரதமர் மோடி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்ட பின் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது: “சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த இளைஞர்களின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் மெச்சத்தக்கவை. மனிதகுலம் எதிர்கொண்ட மாபெரும் சவால்மிக்க காலத்தில் இவர்கள் தேர்வுகளுக்கு தயார் செய்து அவற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.”

“சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நமது இளம் தேர்வுப் போராளிகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங்களின் உள்மனம் கூறுவதை பின்பற்றுமாறு அவர்களை நான் வலியுறுத்துகிறேன். எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அதில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.”

“தங்களின் தேர்வு முடிவுகளில் சில மாணவர்களுக்கு மகிழ்ச்சி இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரு தேர்வு மட்டும் அவர்கள் யார் என்பதை ஒருபோதும் தீர்மானிப்பதில்லை என்பதை அவர்கள் அறியவேண்டும். வரும் காலங்களில் அவர்கள் நிச்சயம் பல வெற்றிகளை அடைவார்கள் என்று நான் நம்புகிறேன். தேர்வு தொடர்பாக நாம் விவாதித்த இந்த ஆண்டின் தேர்வு குறித்த விவாதத்தின் அம்சங்களையும் பகிர்ந்துள்ளேன்.”

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் குறிப்பில், "சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களின் கல்விப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள். வரும் காலங்களில் இந்த இளைஞர்கள் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை  சிபிஎஸ்இ  வெளியிட்டது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 92.71% ஆகும். கொரோனா தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை விட (2020,2019) இந்தாண்டு தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்துள்ளன.

First published:

Tags: 10th Exam Result, CBSE