Home /News /education /

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் - யுஜிசி கடிதம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் - யுஜிசி கடிதம்

University Grant Commission

University Grant Commission

PM CARES for Children Scheme | 2022 மார்ச் 14 ம் தேதி வரையில், pmcaresforchildren.in/ என்ற இணையதளம் வாயிலாக 8995 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கென கூடுதல் இடங்கள் உருவாக்க வேண்டுமென உயரக்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலை மானியக்குழு கடிதம் எழுதியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், " கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக பிஎம் கேர்ஸ் திட்டத்தை (PM CARES for Children Scheme) இந்திய அரசு அறிவித்தது. அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஒன்றிணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டு அமைச்சகம்  தகுதியுடைய குழந்தைகளை அடையாளம் கண்டு வருகிறது. இதன் மூலம், குழந்தைகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு, 2021, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டச் சான்றிதழ்கள் (PM CARES for Children Scheme, 2021) வழங்கப்படும். இதை  கருத்தில் கொண்டு, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கூடுதல் இடங்களை உருவாக்க பரிந்துரைக்கப்படுகின்றன" என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழவுடன் (AICTE) இணைந்த அனைத்து பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கென கூடுதலாக இரண்டு இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பலகலைக்கழக மானியக் குழுவும்  இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

8,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன:  2022 மார்ச் 14 ம் தேதி வரையில், pmcaresforchildren.in/ என்ற இணையதளம் வாயிலாக 8995 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டு அமைச்சர் நாடாளுமன்றத்தில்  முன்னதாக தெரிவித்தார். இதில், 4305 விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் முழுமையான ஆய்வுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும் கூறினார். தமிழ்நாட்டில், இதுவரை பெற்றோரை இழந்த 389 குழந்தைகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

2021 குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம்: 

கொரோனா தொற்று காரணமாக 2021 மார்ச் 11  முதல் பெற்றோர் இருவரையும் அல்லது காப்பாளர்கள் இருவரையும் அல்லது தத்தெடுத்த பெற்றோர் இருவரையும் அல்லது உயிருடன் இருக்கும் ஒரே பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு 2021 மே 29  அன்று குழந்தைகள் திட்டத்துக்கு பிஎம் கேர்ஸ் நிதியைப் பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், குழந்தைக்கு 18 வயதாகும் போது பயன்படும் வகையில் ரூ 10 லட்சம் வைப்புத்தொகையை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பிஎம் கேர்ஸ் அளிக்கும். இந்த தொகை:குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம்: 

18 வயதில் இருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் கல்வியின் போது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித் தொகையை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும், மற்றும்

23 வயதானவுடன், தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்காக மொத்த பணமும் பயனாளிக்கு வழங்கப்படும்.
Published by:Salanraj R
First published:

Tags: PM Cares

அடுத்த செய்தி