12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

தேர்வு - மாதிரிப்படம்

நுழைவுச் சீட்டினை நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • Share this:
    12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி விண்ணப்பித்தவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ஆகியோர்க்கு ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளது.

    அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 19-ம் வரை நடைபெறவுள்ளது. 12 ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் ஜூலை 19 ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி ஜூலை 23 முதல் 28 ந் தேதி வரையிலான நாட்களில் விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 ல் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது துணைத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Also Read : தமிழகத்தில் 16 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு

    தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்த பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்ப எண் இல்லாத காரணத்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

    Also Read : கிராமங்களில் அங்கன்வாடி, தொடக்க பள்ளிகளை திறக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை

    மேலும் 2020-2021ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 19.7.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதி, ஆகஸ்ட் 2021 12 ம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கட்டாயம் அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுத வேண்டும். மேலும், அந்த மாணவர்கள் தற்போது எழுதவுள்ள துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே 12 தேர்வின் இறுதியான மதிப்பெண்கள்
    ஆகும் என அதில் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: