12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

ஊரடங்கு காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
கடந்த மார்ச் 24ந் தேதி ப்ளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்தன. இந்நிலையில் அரசு தேர்வுகள் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, வேதியியல் கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மார்ச் 24-ம் தேதி அன்று நடந்த இறுதி தேர்வினை தவறவிட்ட மாணவர்கள், மறு தேர்வு எழுத விரும்பினால் மாணவர்களிடம் விருப்ப கடிதத்தை வரும் 24-ம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ம் தேதியன்று நடந்த தேர்வினை போக்குவரத்து பாதிப்பால் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்று அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read... எல்லைகளை மூடியது புதுச்சேரி! இ-பாஸ் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது...
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading