பாடங்கள் ஐந்தாகக் குறைந்தால் மாணவர்களின் பன்முகவாய்ப்பு குறைந்துவிடும்- பிரின்ஸ் கஜேந்திரபாபு

எந்த துறையாக இருந்தாலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 தாள்கள் இருப்பதுதான் சிறந்தது என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.

Vaijayanthi S | news18
Updated: June 18, 2019, 1:48 PM IST
பாடங்கள் ஐந்தாகக் குறைந்தால் மாணவர்களின் பன்முகவாய்ப்பு குறைந்துவிடும்- பிரின்ஸ் கஜேந்திரபாபு
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
Vaijayanthi S | news18
Updated: June 18, 2019, 1:48 PM IST
தமிழகத்தில் உள்ள 6 பாடங்கள் முறை தனித்தன்மை வாய்ந்தது. இதை மாற்றினால் மாணவர்களுக்கு பன்முக வாய்ப்பு என்பது குறைந்துவிடும், ஏன் இந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிலேயே அதற்கான பாடத்தை மட்டும் படிக்கும் வகையில் தேர்வு முறைகளில் நடப்பு ஆண்டு முதலே மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும், 6 பாடங்கள் 5 ஆக குறைத்து தமிழக அரசு அறிவிக்க முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு 6 பாடங்கள்தான் இருக்கும். தேர்வு முறையில் எந்த மாற்றமும் கிடையாது. 5 பாடங்கள் கொண்டு வரலாமா என மக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளோம். அதன்பின்னர் முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த கல்விமுறை மாற்றம் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நியூஸ் 18 தமிழ்நாடு இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,  “6 பாடங்கள் என்பது நம் தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த கல்விமுறை. இதை வலுப்படுத்த வேண்டுமே தவிர மாற்றக்கூடாது. அதுமட்டுமல்லாமல் ஏன் இந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

பாடத்திட்டம் 5 ஆக குறைவதினால் மாணவர்கள் எந்த வகையில் பாதிக்கபடுவார்கள் என்ற கேள்விக்கு, “பாடங்கள் 6 ஆக உள்ள இந்தக் கல்விமுறையை மாற்றினால் மாணவர்களுக்கு உயர்கல்வியில் கிடைக்கக்கூடிய பன்முகவாய்ப்பு குறைந்துவிடும். அதனால் அவர்கள் வேறு எந்த பாடத்திலும் சேர்ந்து படிக்க முடியாமல் போகலாம். அதனால் இந்தக் கல்வி முறையை மாற்றக்கூடாது” என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் மக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் இந்த கல்விமுறை மாற்றப்படும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, “பரவலாக அனைவரிடமும் கருத்து கேட்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர் அமைப்புகளிடமும், அதற்கான சங்கத்திடமும் கருத்துகளை கேட்க வேண்டும். அதேபோல பெற்றோர் அமைப்புகள், கல்வியாளர் அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்கான அமைப்புகளிடமும் கருத்து கேட்க வேண்டும்” என்றார்.

மொழிப்பாடங்களுக்கு 2 தாள்கள் இருந்த நிலையில், அது இனி ஒரே தாளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, “எந்தத் துறையாக இருந்தாலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 தாள்கள் இருப்பதுதான் சிறந்தது. ஏனென்றால் பொறியாளர்களாக இருந்தவர்கள் தான் தற்போது தமிழ் ஆளுமை உடைய தமிழ் அறிஞர்களாக சிறந்து விளங்குகிறார். அதற்கு உதாரணமாக நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் 2- மொழிகளிலும் 2 தாள்கள் இருப்பது சிறந்ததே” என்று கூறினார்.
Loading...
Also see...  பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள்!  

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் படிக்கத் தேவையில்லை?




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...