பொறியியல் சேர்க்கை: கணினி,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவுகளையே அதிக மாணவர்கள் தேர்வு

News18 Tamil
Updated: July 16, 2019, 10:22 AM IST
பொறியியல் சேர்க்கை: கணினி,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவுகளையே அதிக மாணவர்கள் தேர்வு
கோப்பு படம்
News18 Tamil
Updated: July 16, 2019, 10:22 AM IST
முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வு முடிவில் கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கணினி,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளே மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், ஐடி  பாடப்பிரிவுகளை மாணவர்கள் அதிகளவில் விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

கணினி அறிவியலை 1674 மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இசிஇ பாடப்பிரிவை 1438 மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங்கை 694 மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 675 மாணவர்கள்ஐடி, 631 மாணவர்கள் இ.இ.இ. பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.


இதுகுறித்து கல்வியாளர்களிடம் கேட்டபோது மைனிங் தொழில்நுட்பம், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம், செராமிக் தொழில்நுட்பம் போன்ற ஏராளமான வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய படிப்புகள் உள்ளன.

உதாரணமாக, மும்பையில் உள்ள Insutitute of Chemical Technology -ல் உள்ள ஒருங்கிணைந்த 5 வருட M.Tech. படிப்பை முடித்தால் இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும் அளவுக்கு வேலை வாய்ப்பை பெற முடியும். இதுபோன்ற படிப்புகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

 

Loading...

ஒரே மாதிரியான பாடப்பிரிவுகளில் ஆண்டுதோறும் அதிகளவு மாணவர்கள் சேருவதால் அத்துறையில் வேலைவாய்ப்புக்கான போட்டியை அதிகரிப்பதோடு, மாணவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையும் ஏற்படும். மாணவர்கள் ஒரே மாதிரியான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்காமல் வேலை வாய்ப்புள்ள இதர படிப்புகளின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Watch Also:
First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...