இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வின் இரண்டாவது கட்டம் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானிய குழு-தேசிய தகுதி தேர்வு (UGC- NET), ஒவ்வொரு ஆண்டும் ஜுலை/டிசம்பர் ஆகிய மாதங்களில் இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் தேர்வுகளை ஒருங்கிணைத்து இந்தாண்டு ஜுலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .
அதன்படி, முதல் கட்டத் தேர்வு ஜுலை மாதம் 08, 09, 11, 12 ஆகிய நாட்களில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. அரசியல் அறிவு, மராத்தி, சீனம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 பாடநெறிகளுக்கு, நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இரண்டாவது கட்டத் தேர்வு ஆகஸ்ட் 12,13,14 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தேர்வு தேதிகள் தள்ளிவைக்கபடுவதாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
City of Examination Centre shall be displayed on 11 September 2022 on NTA website. Admit Cards can be downloaded on 16 September 2022 from NTA website.
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) August 8, 2022
தனது ட்விட்டர் பதிவில், முதலாவது அமர்வில் விடுபட்ட பட்டங்களையும் சேர்த்து, 64 பாடநெறிகளுக்கான இரண்டாம் அமர்வுத் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 20 முதல் 30ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும், தேர்வு மைய நகரம் (City of Examination Centre) குறித்த அறிவிப்பு செப்டம்பர் 11ம் தேதி வெளியாகும் என்றும், செப்டமபர் 16ம் தேதி முதல் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்க: TNPSC: வனத்தொழில் பழகுநர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது
மேலும், தேர்வு குறித்து சமூக ஊடங்களில் உலவும் போலியான அறிவிப்புகளை நம்ப வேண்டாம், ugcnet.nta.nic.in ல் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் சரிபார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UGC