Home /News /education /

பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

பெரியார் பல்கலை

பெரியார் பல்கலை

Periyar University exam results 2022: மாணாக்கர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பெரியார் பல்கலைக்கழக ஜூன் 2022ம் பருவத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

    பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் பயிலும் மாணாக்கர்களின் ஜூன் 2022 ஆம் பருவத் தேர்வுகள் 22-06-2022 முதல் 20-07-2022 வரை நடைபெற்றது.

    இத்தேர்வெழுதிய இளநிலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை இரண்டாமாண்டு மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வாயிலாகவும் மற்றும் இணைவுபெற்ற கல்லூரிகளிலும் தெரிந்துக்கொள்ளலாம்.

    மாணாக்கர்கள் மறுமதிப்பீடு, மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற Online - மூலம் 09-09-2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாணாக்கர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்று பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Periyar

    அடுத்த செய்தி