ஊதிய உயர்வு கேட்டு கருணை மனு அனுப்பி கெஞ்சும் பகுதிநேர ஆசிரியர்கள்...!

ஊதிய உயர்வு கேட்டு கருணை மனு அனுப்பி கெஞ்சும் பகுதிநேர ஆசிரியர்கள்...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: February 16, 2020, 9:58 AM IST
  • Share this:
பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக, ரூ. 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கேட்டு கருணை மனு அனுப்பி வருகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் கல்வி ஆகிய பாடங்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் 16, 549 பேர் நியமனம் செய்யப்பட்டடனர். இதில், தற்போது, 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

முதலில் மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 7,700 ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களை அணுகியும் பலனில்லை.


பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில், பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கருணை மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூ. 34, 181 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பகுதி நேர ஆசிரியர்களின் 8 ஆண்டுகால கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருப்பது முரணாக இருக்கிறது.

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால்இல்லாவிட்டால், அடுத்த கட்டமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் கருணை மனுவை சமர்ப்பிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
First published: February 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading