பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சி...! மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி...?

பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சி...! மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி...?
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: January 17, 2020, 8:25 PM IST
  • Share this:
பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் வரும் 20-ம் தேதி 'பரிச்சா பே சர்ஜா' என்ற பெயரிலான உரையால் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

டெல்லி தால்கடோரா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி இதே இடத்தில் முதன்முறையாக நிகழ்ச்சி நடந்தது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரைத் தேர்வை வைத்து, அதில் தேர்ச்சி பெறுபவர்களை இந்த உரையாடல் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்கிறது.


பிரதமருடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் 66 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்