• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • தேர்வை எதிர்கொள்வது எப்படி? ஜனவரி 20 அன்று மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

தேர்வை எதிர்கொள்வது எப்படி? ஜனவரி 20 அன்று மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

  • Share this:
    மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, வருகிற 20-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    பள்ளி மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி தேர்வுகளை எழுதும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி, கடந்த இரண்டு ஆண்டுகளாக,  பரிக்‌ஷா பே சர்ச்சா (PARIKSHA PE CHARCHA) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

    இந்தாண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து, இரண்டாயிரம் மாணவர்கள் பங்குபெறுகின்றனர். இந்த நிகழ்ச்சியை, தூர்தர்ஷன் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் யூடியூப் பக்கத்தில் கண்டு பயன்பெறலாம். வானொலியிலும் ஒலி வடிவில் இந்த நிகழ்ச்சியை கேட்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: