ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் ஆன்-லைன் வழியில் வகுப்புகளை எடுத்து வருகின்றது.
ஒருபுறம் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்று தனியார் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கின்றனர். அதேசமயம் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதாக மற்றொருபுறம் கருத்து முன்வைக்கப்படுகிறது.
தமிழக அரசைப் பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எல்கேஜி வகுப்புகளுக்கு ஆன்-லைன் வழியில் வகுப்புகளை தனியார் பள்ளிகள் எடுக்க தொடங்கியுள்ளன.
அதுகுறித்து குழந்தையின் உறவினர் குறுஞ்செய்தி வாயிலாக தகவல்களை பகிர்ந்துள்ளார் . ஆன்லைன் வகுப்பில் அமரவைக்கப்பட்ட தன் உறவினரின் குழந்தை ஆன்லைன் வகுப்பு குறித்து எந்த புரிதலும் இல்லாததால் குழந்தை அமராமல் அங்கும் இங்கும் ஓடி விளையாடியதாக தெரிவித்துள்ள குழந்தையின் உறவினர், ஆன்லைன் வகுப்பில் அமராமல் குழந்தை ஏன் விளையாடியது என ஆசிரியர்கள் உறவினரிடம் அதிருப்தியை தெரிவித்ததாக கூறுகின்றார்.
மேலும் அந்தக் குழந்தையின் உறவினர், பால்மணம் மாறாத குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எதை கற்பிக்கும், குழந்தைகள் என்ன கற்பார்கள் என்ற எந்த புரிதலும் இன்றி இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடகவை பின்பற்றி தமிழகத்திலும் LKG முதல் 5ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.