இந்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனில் (National Super Computing Mission)
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் இணைந்துள்ளது.
‘பரம் பொருள்' எனப் பெயரிடப்பட்டுள்ள மையத்தை, இந்தக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா முன்னிலையில், சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் நிர்வாகக் குழு தலைவர் பாஸ்கர் பட் திறந்து வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பாஸ்கர் பட், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேவையாற்றுவதில் இந்த வசதி ஒரு முக்கிய பங்கு வகிக்கும். தேசிய கல்வி கொள்கை 2020-இன் அறிவுறுத்தலின்படி இந்த மையத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் பெருமளவு பயனடையும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜி. அகிலா , " சூப்பர் கம்ப்யூட்டர் வசதி, ஆராய்ச்சி வெளியீடு மற்றும் சமூகத் திட்டங்களான சுகாதாரம், விவசாயம், வானிலை, நிதிச் சேவைகள், சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்றும், நிறுவனத்தின் 17 துறைகளின் திட்டங்களை மேம்படுத்தும்" என்று கூறினார்.
தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சூப்பர் கம்ப்யூட்டிங் வசதி அருகிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பரம் பொருள்:
70:30 என்ற விகிதத்தில் சி.பி.யூ மற்றும் ஜி.பி.யூ-வை உள்ளடக்கிய 650 டி.எஃப் சூப்பர் கம்ப்யூட்டர், புனேவிலுள்ள சி-டாக்கால், ரூ. 4 கோடி கூடுதல் செலவில், நிறுவப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஆழ்ந்த கற்றல் உள்ளிட்ட சமூக திட்டங்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், திருச்சிராப்பள்ளியின் தேசிய தொழில்நுட்பக் கழகம், சரியான நேரத்தில் சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவுகிறது.
பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் நிதி உதவியுடன் கூடிய ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்காக உயர்நிலை கணினி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பணிபுரியும் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.
உயர் செயல்திறன் கொண்ட கணினித் திறன்களைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதே தேசிய கம்ப்யூட்டிங் மிஷனின் முக்கிய நோக்காகும்.
இந்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.