Home /News /education /

நீட் தேர்வர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் 'ஒயோ' நிறுவனம்

நீட் தேர்வர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் 'ஒயோ' நிறுவனம்

நீட் தேர்வு

நீட் தேர்வு

NEET 2022 | நீட் தேர்வு எழுதவிருக்கும் தேர்வர்களுக்கு சிறப்பு சலுகையை ஹோட்டல் நுகர்வோர் ஆன்லைன் நிறுவனமான OYO (ஒயோ) அறிவித்துள்ளது.

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 2022ம் ஆண்டுக்கான தேர்வு வரும் 17ம் தேதி நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் இருக்கும் மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான அனுமதிச் சீட்டு இறுதினங்களுக்கு முன்பு வெளியான நிலையில்,தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டு ஒரு வாரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது. மாணவர்

    இந்தாண்டு நீட் தேர்விற்கு மட்டும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் இதுவரை 90% பேர் நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்திருக்கின்றனர்.497 நகரங்களில் கிட்டத்தட்ட  3,500 மையங்களில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்க:  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

    இருப்பினும், பெரும்பாலான தேர்வர்களுக்கு தங்கள் சொந்த மாநிலத்திற்குள், அருகாமையில் உள்ள நகரத்திற்குள் தேர்வு மையங்கள் கிடைக்கப்பதில்லை. இதன், காரணமாக  தேர்வுகளை எழுத நீண்ட தூரத்துக்குப் பயணம் செல்ல வேண்டியிருக்கிறது.மேலும் , இறுதினங்களுக்கு முன்னதாக தேர்வு மையங்களைக்கு அருகில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வேண்டியுள்ளது.  இதனால், தேர்வர்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் சுமைகளை எதிர்கொள்கின்றனர்.

    இந்நிலையில், நீட் தேர்வர்களின் மனச் சுமைகளை குறைக்கும் வகையில் ஓயோ நிறுவனம் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.  ஓயோ செயலி  மூலம் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யும் நீட் தேர்வர்களுக்கு 60 சதவிகிதம் வரை பணச் சலுகை வழங்கப்படும் என்றும், பெண் தேர்வர்களின் பாதுக்காப்பு தக்க முறையில் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துளளது.

    இதையும் வாசிக்கNEET 2022 : நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

    இந்த சலுகையைப் பெற ஓயா செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் தேர்வு மையங்களுக்கு அருகாமையில் உள்ள விடுதி அறைகளை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்ய வேண்டும். பணம் செலுத்துவதற்கு முன்பாக 'NEETJF' என்ற ப்ரோமோ கோடை பயன்படுத்தினால் செலுத்த வேண்டிய பணத்தில் 60% வரை தள்ளுபடி செய்யப்படும். நீண்ட தூரத்தில் உறவினர்கள் யாரும் இல்லாத தேர்வு மைய நகரங்களுக்கு பயணம் செய்யும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி