Home /News /education /

சிடிஎஸ், என்டிஏ தேர்வர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கும் ஓயோ நிறுவனம்... ஆஃபரை பெறுவது எப்படி?

சிடிஎஸ், என்டிஏ தேர்வர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கும் ஓயோ நிறுவனம்... ஆஃபரை பெறுவது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்விற்கு மட்டும் 5.7 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 1.7 லட்சம் பேர் பெண் விண்ணப்பதாரர்கள் ஆவர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    2022 தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி எழுத்துத் தேர்வு (National Defence Academy and Naval Academy Examination II) மற்றும் 2022 முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு (Combined Defence Services Examination - II )  நாளை நடைபெறுகிறது.

    இதற்கான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே யூபிஎஸ்சி இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள், www.upsc.gov.in மற்றும் www.upsconline.in ஆகிய தளங்களின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்விற்கு மட்டும் 5.7 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 1.7 லட்சம் பேர் பெண் விண்ணப்பதாரர்கள் ஆவர். சென்னை, கோயம்புத்தூர், வேலூர், பெங்களூரு என நாட்டின் 75க்கும் மேற்பட்ட  நகரங்களில் உள்ள மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், தேர்வர்களின் மனச் சுமைகளை குறைக்கும் வகையில் ஓயோ நிறுவனம் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. ஓயோ செயலி மூலம் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யும்  NDA,CDS தேர்வர்களுக்கு 45 சதவிகிதம் வரை பணச் சலுகை வழங்கப்படும் என்றும், பெண் தேர்வர்களின் பாதுக்காப்பு தக்க முறையில் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    டெல்லி, பெங்களூர், சென்னை, கவுதம் புத்த நகர், குர்கான், லக்னோ, சண்டிகர், ஹைதராபாத், அகமதாபாத், ஜெய்ப்பூர், இந்தூர், லூதியானா, புவனேஷ்வர், பாட்னா, விசாகப்பட்டினம், வாரணாசி, கொல்கத்தா, புனே, டேராடூன் உள்ளிட்ட 19 நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு இந்த சிறப்பு சலுகை பொருந்தும்.

    இதையும் வாசிக்க: யுபிஎஸ்சி முதன்மை தேர்வு செப்டம்பர் 16-ல் தொடக்கம் : ஹால் டிக்கெட் வெளியீடு

    இந்த சலுகையைப் பெற ஓயா செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் தேர்வு மையங்களுக்கு அருகாமையில் உள்ள விடுதி அறைகளை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்ய வேண்டும். பணம் செலுத்துவதற்கு முன்பாக 'NDACDS' என்ற ப்ரோமோ கோடை பயன்படுத்தினால் செலுத்த வேண்டிய பணத்தில் 45% வரை தள்ளுபடி செய்யப்படும். நீண்ட தூரத்தில் உறவினர்கள் யாரும் இல்லாத தேர்வு மைய நகரங்களுக்கு பயணம் செய்யும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

    தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி காலிப்பணியிடங்கள்: 




















    தேசிய பாதுகாப்பு அகாடமிராணுவம் - 208 (மகளிர் 10)கடற்படை - 42 (மகளிர் 03)விமான படை  -120 (மகளிர் - 06)
    இந்திய கடற்படை அகாடமி30 (ஆண்கள் மட்டும் )
    மொத்தம்400


    ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை காலிப்பணியிடங்கள்:
































    முப்படை சேவைகள்காலியிடங்கள்
    டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையம்100
    கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படைப் பயிற்சி மையம்22
    ஐதராபாதில் உள்ள விமானப்படை பயிற்சி மையம் (பறக்கும் பயிற்சிக்கு முந்தைய பயிற்சி)32
    சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் (ஆண்களுக்கான 118-வது குறுகிய கால ஆணைய பயிற்சி)169
    சென்னையில்  32-வது குறுகிய கால ஆணைய (தொழில்நுட்பம் சாராத) (பெண்களுக்கான) பயிற்சி16
    மொத்தம்339

    தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.   நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    Published by:Salanraj R
    First published:

    Tags: UPSC

    அடுத்த செய்தி