Home /News /education /

RTE | தமிழகத்தில் 6,000 தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை

RTE | தமிழகத்தில் 6,000 தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருப்பதால், அந்த இடங்களுக்கு இன்று வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான குலுக்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

    அதன் ஒருபகுதியாக சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் பெற்றோர் முன்னிலையில் நடைபெற்றது.

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 கீழ் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் LKG வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

    இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவு துவங்கியது. பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 25 ஆம் தேதி முடிவடைந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 8,238 தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 96 ஆயிரம் இடங்களுக்கு, 1,42,175 மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருப்பதால், அந்த இடங்களுக்கு இன்று வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் உள்ள 8,234 பள்ளிகளில் 6 ஆயிரம் பள்ளிகளில் குழுக்கல் முறையிலும், 2,234 பள்ளிகளில் உள்ள இடங்களைக் காட்டிலும் குறைவான விண்ணப்பங்கள் வந்ததால் குலுக்கல் இன்றி  மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டன.
    Published by:Salanraj R
    First published:

    Tags: RTE

    அடுத்த செய்தி