முகப்பு /செய்தி /கல்வி / பள்ளி மாணவர்களுக்கான மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகைக்கு தேர்வு.. ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

பள்ளி மாணவர்களுக்கான மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகைக்கு தேர்வு.. ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் இலக்கிய திறனறிதல் தேர்வுக்கு 2,60,000  மாணவர்கள்  விண்ணப்பம் செய்துள்ளனர். பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியத் திறனறிதல் தேர்வு, வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இரண்டு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில் , தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற திட்டம் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டு இருந்தது . அதனை நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கஎல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: வெளியானது அரசாணை!

வரும் 15ஆம் தேதி, 843 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் . தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்க: தமிழகத்தில் வேகமாக குறைந்துவரும் தமிழ் வழியில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை!

100 மதிப்பெண்களுக்கு நடைபெறக்கூடிய தேர்வில் இருந்து, மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 750 மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்தும் மீதமுள்ள 750 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் 1500 மாணவர்களுக்கு, மாதம் 1500 ரூபாய் வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

First published:

Tags: Examination